இன்று தங்கம் விலை உயர்வு: ஒரு சவரன் ரூ.1,08,280-க்கு விற்பனை!
Updated: Oct 17, 2026, 10:00 IST1792211441061
ஆயுதப்பூஜை, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வரவுள்ள நிலையில், தங்கத்தின் விலை மேலும் குறையுமா? இல்லை ஏறுமா? என்ற கேள்வி இருந்து வருகிறது. சர்வதேச அளவில் நிகழும் பொருளாதார சிக்கல்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையும் மாற்றம் கண்டு வருகிறது.
ஆபரணத் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.13,515-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,08,120-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று அதே விலையில் தொடர்ந்தது. இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு 20 உயர்ந்து ரூ.13,535-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,08,280-க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

