தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக உயர்ந்தது..!!
பொதுவாக உலக நாடுகளிடையே போர் நடந்தால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்குவர். இதனால் தங்கம் விலையானது உச்சத்தை தொடும். ஆனால் நிபுணர்களையே குழப்பும் விதமாக அமெரிக்கா - ஈரான் போரின் தாக்கம் தங்கம் விலையின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதன் காரணமாக, கடந்த ஒரு சில மாதங்களில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இதற்கு அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுகட்ட உலக நாடுகள் தங்கத்தின் மீதான முதலீட்டை தவிர்த்தது போன்ற காரணங்கள் சொல்லப்பட்டன.
கடந்த மாதம் போர் முடிவுக்கு வந்த நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் தங்கம் விலை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கும் என நிபுணர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபரி டிரம்ப் அறிவித்த காரணத்தினால் மீண்டும் போர் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் தங்கத்தில் விலை எப்படி மாறும் என கணிக்க முடியாம சூழல் உள்ளது. கடந்த முறை போன்று குறையுமா அல்லது உச்சத்தை தொடுமா என குழப்பம் நிலவி வருகிறது.
நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 10) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து, ரூ.1,06,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.13,350-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு இதே நாள் ஜூலை 10-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,160-க்கும், 1 கிராம் ரூ.9,020-க்கும் விற்பனையானது.

