தங்கம் விலையில் அதிரடி மாற்றம்..!!
Apr 25, 2026, 10:08 IST1777091894861
இந்திய மக்களின் சேமிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கம், தினமும் ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் 5 நாட்களில் சவரனுக்கு ரூ.2000-க்கு மேல் என தங்கம் விலை கணிசமாக சரிந்துள்ளது.
அந்த வகையில் சென்னையில் நேற்று (ஏப்.24) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,100க்கும், ஒரு சவரன் ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

