ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தண்டியது..

 
gold gold


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து சவரன் மீண்டும் ரூ.74,00ஐ தாண்டி  விற்பனை செய்யப்படுகிறது. 

இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அவ்வப்போது அதிகளவில் உயர்வதும், கணிசமாக குறைவதுமாக இருந்தாலும் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கத்திற்கான மவுசு அதிகமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. தங்கத்தை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பான மற்றும்  சிறந்த சேமிப்பாகவும் கருதுகின்றனர். அந்தவகையில் ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தும், அவ்வப்போது குறைந்தும்  வருகிறது. 

gold

கடந்த வாரம்  தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, சனிக்கிழமை(ஜூலை 19) அன்று  சவரன் ரூ.73,360க்கும்  ஒரு கிராம் ரூ.9,170க்கும் விற்பனையானது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான நேற்று  தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரன் ரூ. 73,440க்கும்,  கிராம்  ரூ.9,180க்கும் விற்பனையானது. அதேநேரம் வெள்ளி விலை மாற்றமின்றி, சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.126க்கு விற்கப்படுகிறது.  

இந்நிலையில் இன்று (ஜூலை 22) தங்கம் விலை ஒரே அடியாக சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து , சவரன் மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.  அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ74,280க்கும், கிராம் ரூ.9,285க்கும் விற்பனை செய்யப்படுகிறது.