நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த தங்கம் விலை!

 
Gold

தங்கம் விலை தாறுமாறாக ஏறி, இறங்கி ஆட்டம் காட்டி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். கடந்த பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூண்டபோது, சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 3,900 டாலர் வரை குறைந்தது.

ஆனால், போர் நிறுத்தத்திற்கு பிறகு தங்கம் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. இதனால், இந்தியாவில் ஒரு சவரன் விலை ரூ. 1.20 லட்சத்தைத் தொட்டது. இந்த விலையேற்றம் இன்னும் தொடரும் என கருதப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாத இறுதியில் மடமடவென சரிந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்., 10) ரூ.880 உயர்ந்துள்ளது.

நேற்று ஒரு கிராம் ரூ.14,145-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கு விற்பனையாகிறது.

ஒரு சவரன் நேற்று ரூ.1,13,160-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை 8வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.