தங்கம் விலை சவரனுக்கு 800 உயர்ந்தது..!!
Apr 3, 2026, 09:59 IST1775190571584
சென்னையில் இன்று (ஏப்.03) தங்கம் விலை உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்து வருவதால், வரும் நாள்களிலும் விலை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை இன்று (ஏப்.3) சவரனுக்கு 800 உயர்ந்து மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.13,850க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,10,800க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

