அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்த தங்கம் விலை..!!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73,680க்கு விற்பனையாகிறது

சர்வதேச சந்தை நிலவரங்கள், ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஈரான் போர் உள்ளிட்ட உலக நாடுகளில் நிகழும் அசாதாரண சூழல் காரணமாக தங்கம் விலை அதிரடியாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. அதிலும் ஜூலை மாதம் தொடங்கிய முற்பாதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை,  கடந்த வாரத்தில் சற்று குறையத் தொடங்கியது.  

gold

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரயாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.  அதன்படி சென்னையில் இன்று  22 கேரட் ஆபரணத்தங்கம்  ஒரு சவரன் ரூ.73,680 க்கும், கிராமுக்கு 60 ரூயார் குறைந்து  ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ. 9,210க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து கிராம் வெள்ளி ரூ.127க்கு விற்பனையாகிறது.