தங்கம் விலையில் மிக பெரிய மாற்றம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது..!!
ஆபரண தங்கத்தின் விலை தாறுமாறாக மாற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் முழுவதுமே தங்கம் விலை கடுமையான சரிவை கண்டது. அதற்கு அமெரிக்கா - ஈரான் இடையேயான போரின் தாக்கம் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வினால் தங்கம் விலை குறைந்தாலும், இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் மீண்டும் விலை சூடுபிடிக்க தொடங்கும் என்று நிபுணர்கள் கூறிவந்தனர்.
ஆனாலும், கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நகை வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நேற்று காலை கணிசமாக குறைந்த விலை, ஒரு சில மணிநேரங்களில் மீண்டும் அதிகரித்தது.
தமிழகத்தில் நேற்று ஒரு சவரன் ரூ.1,06,000க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1200 உயர்ந்து, ரூ.1,07,200க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ரூ.150 உயர்ந்து ரூ.13,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.250க்கு விற்கப்படும் நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000க்கு விற்கப்படுகிறது.

