சற்று இறக்கம் காட்டிய தங்கம் விலை.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..

 
தங்கம் வாங்க உடனே கிளம்புங்க....

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின்  விலை நிலவரம்

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில்  கடந்த மாதம் ( ஜூலை 1)  முதல் தேதியிலேயே,  தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது,  இதனைத் தொடர்ந்து, தங்கம் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.   ஜூலை முதல் வாரத்தில் மட்டும்  தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு  தொடர்ந்து  குறைவதும், பின் உயர்வதுமாக  தங்கம் விலை இருந்து வருகிறது.  இந்நிலையில், இம்மாத தொடக்கத்திலேயே சற்று இறக்கம் காட்டிய தங்கம் விலை  சவரனுக்கு 160 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.  இது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

ஆனால்  நேற்று, சற்றும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு  ரூ.504 உயர்ந்து,  ஒரு சவரன்  ரூ.38,920-க்கும், கிராம் ரூ.4,865-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படிசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,760-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.   அதேபோல், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.4,845-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு  60 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி  ரூ.63.00-க்கும், ஒரு கிலோ 63,000-க்கும் விற்கப்படுகிறது.