வாரத்தின் முதல் நாள் குறைந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.190 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 550-க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்படட்டது.
தங்கத்தை போல, வெள்ளி விலையும் நேற்று குறைந்திருந்தது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ. 2 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

