சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹240 குறைந்தது!

 
gold

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

gold

இந்தியாவில் தங்கம் விலை என்பது சர்வதேச பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வப்போது மாறி வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை கண்டு வரும் தங்கம் விலையானது இந்த மாத தொடக்கத்தில் தொடர்ந்து உயர்ந்து காணப்பட்டது. இதையடுத்து சவரன் 46 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தது.

gold

இந்த சூழலில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,675 ஆக விற்பனையானது. சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்து 400 ரூபாயாக விற்பனையானது. அத்துடன் வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 78.60 காசுகள் ஆகவும்,  ஒரு கிலோ வெள்ளியின் விலை 78 ஆயிரத்து 600 ரூபாயாகவும் விற்பனையானது.

gold

இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5645 ஆக உள்ளது. அத்துடன் ஒரு சவரன் தங்கத்தின் விலை 45 ஆயிரத்து 160 ஆக விற்பனையாகி வருகிறது.