புதிய உச்சம் நோக்கி தங்கம் விலை: சவரன் ரூ.1,06,040-ஐ தாண்டியது!

 
Gold

அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக தங்கம் விலை தொடர் ஏறுமுகத்தில் இருக்கிறது. டிரம்ப்பின் நிர்வாகம் மீது ஏற்பட்ட நம்பிக்கையின்மையால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பானதாக கருதும் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதன் விளைவாக சர்வதேச சந்தையின் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் வரை, இனி வரும் நாட்களில் தங்கம் விலை குறைந்து இந்தியாவில் ஒரு சவரன் விலை ரூ. 75,000 வரை விற்கப்படும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவால் தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,05,280க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.760 உயர்ந்து ரூ.1,06,040க்கு விற்கப்படுகிறித்து.

மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.95 உயர்ந்து ரூ.13,255க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.205க்கும் ஒரு கிலோ ரூ.2,05,000க்கும் விற்கப்படுகிறது