தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிரடி உயர்வு..!

 
gold


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ஒரு சவரம் மீண்டும் ரூ.55 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  

உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், கனிசமாக விலையேற்றம் கண்டுவந்துள்ளதே நிதர்சனம். கடந்த வெள்ளிக்கிழமை (செப்.13) ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு 960 ரூபாயும் ஏற்றம் கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்றைய தினம் சென்னையில்  தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6,825க்கும் ,  ஒரு சவரன் ரூ. 54,600க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.  

gold

இதனைத்தொடர்ந்து  கடந்த திங்கள் கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில்,  செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் 120 வீதம் 2 நாட்களில் ரூ. 240 குறைந்தது.   மேலும், 3வது நாளாக நேற்று சென்னையில்   தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது.  அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து  ஒரு கிராம் ரூ. 6,825க்கும், ஒரு சவரன் ரூ.54,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில் வெள்ளி விலை   96 ரூபாய்க்கு விற்கப்பட்டது.  

இந்நிலையில் இன்று(செப்.20)  சென்னையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது.  சென்னையில் 2 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,885க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.55,080க்கு விற்பனையாகிறது. இதேபோல் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.97.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.