தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது!

 
gold

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ. 45,200க்கு விற்பனையாகிறது.

கடந்த மார்ச் மாதம் முதலே தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. அவ்வப்போது பெயரளவுக்கு ஓரிரு நாட்கள் குறைந்தாலும், கனிசமாக விலை உயர்ந்துள்ளது என்பதே நிதர்சனம். கடந்த ஆண்டு நவம்பர் , டிசம்பர் மாதங்களில் ரூ. 39,000 முதல் ரூ. 40,000 வரை விற்பனையான தங்கம் விலை, கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து  அண்மையில் ஒரு சவரன் ரூ.46,000 தொட்டது. இதுவே தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக  தங்கம் சற்று விலை குறைந்து வருகிறது.

gold

தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கம் இருந்து வரும் நிலையில், நேற்று ரூ. 360 குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கம் விலை மேலும் 160 ரூபாய்  அதிரடியாக குறைந்துள்ளது.  அதாவது சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5,620 ரூபாய்க்கும் , ஒரு சவரன் ரூ.45,200க்கும் விற்பனையாகிறது.  இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து  ஒரு கிராம் ரூ.78.10க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளிரூ. 78,100க்கு விற்கப்படுகிறது.