தங்கம் விலை சவரனுக்கு ₹240 குறைந்தது!!
Jul 9, 2024, 10:33 IST1720501392881

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹240 குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,400 ஆக விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹240 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹54,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து கிராம் ₹6,770க்கும் விற்பனை செய்யப்படுகிறது.