தங்கம் விலை குறைந்தது #GOOD NEWS
Oct 2, 2025, 10:03 IST1759379610693
தங்கம் விலை நேற்று காலையில் சவரனுக்கு ரூ.240-ம், மாலையில் ரூ.480-ம் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.87,600-க்கும், ஒரு கிராம் ரூ.10,950-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.163-க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

