வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுக்கும் தங்கம்..!! ரூ.1 லட்சத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை..!!
Dec 15, 2025, 09:33 IST1765771402635
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பவுன் 57,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் விலை அதிகரித்து கொண்டே சென்றது.
தங்கம் விலை 2025 இறுதிக்குள் 1 லட்சம் ரூபாயை கடக்கும் என வர்த்தக வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில், அது இன்னும் சில தினங்களில் நிஜமாகவும் சூழல் தெரிகிறது.
இன்று (டிச. 15) சென்னையில், 22K தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ரூ.12,460-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.99,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து 213-க்கும், கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ரூ.2.13 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.


