காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கம்..! இன்று தங்கம் விலை கிடு கிடு உயர்வு..!!
பொதுவாக உலக நாடுகளிடையே போர் நடந்தால் தங்கத்தின் விலை கணிசமாக உயரும். ஆனால், அந்த கருத்தை அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மாற்றி அமைத்தது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து பெரும்பாலும் தங்கம் விலை இறக்கம் கண்டு வருகிறது. இதற்கு, அமெரிக்க டாலர் மதிப்பு வலுப்பெற்றதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான உலகளாவிய வர்த்தகங்கள் அமெரிக்க டாலரில் நடைபெறும் நிலையில், டாலர் மதிப்பு உயரும்போது முதலீட்டாளர்கள் அதிக லாபம் தருகிற பிற முதலீடுகளின் மீது நாட்டம் காட்டுகின்றனர். இது நிலையான மற்றும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆபரணத் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.13,230-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கும் விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கு 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

