நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.384 சரிவு..

 
தங்கம் விலை

வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 384 ரூபாய் குறைந்திருக்கிறது.  எதிர்பாரா வகையில் அதிரடியாக தங்கம் விலை சரிந்திருப்பது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   
 
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக  தங்கம் விலையில் மாற்றம் இருந்துகொண்டே இருக்கிறது. ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளதால், பங்குச்சந்தைகளில் நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் பாதுகாப்பான புகலிடம் என்பதை உணர்ந்து தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர்.   இதனால் தங்கம் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.  அவ்வப்போது,  தேவை குறையும் என்பதால் விலை  குறைவதும், உயர்வதுமாக நீடித்து வருகிறது. ஆனால் தங்கம் விலை உயரும் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருந்து  வருகிறது,  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

 சென்னையில் கடந்த வார தொடக்கத்தி தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை கடந்த வெள்ளிக்கிழமை அன்று  தங்கம் விலை அதிரடியாக  சவரனுக்கு ரூ.376 உயர்ந்து ரூ.39,176க்கு விற்பனை செய்யப்பட்டது.  அதனைத்தொடர்ந்து சனிக்கிழமையும்   சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39,224க்கு விற்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமின்றி இருந்தது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம். 

இந்நிலையில்  வாரத்தின் முதல்நாளான இன்று ( திங்கள் கிழமை ) தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்திருக்கிறது.  சவரனுக்கு 384 ரூபாய் குறைந்து,  22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ. 38,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல் கிராமுக்கு 48 ரூபாய் குறைந்து ,  சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,903 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலையும்  குறைந்திருக்கிறது.   கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் ரூ.69.50க்கு விற்கப்பட்ட வெள்ளி இன்று 67 ரூபாய் 600 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிலோ வெள்ளி ரூ. 67,600 விற்கப்படுகிறது.