காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கம் மற்றும் வெள்ளி விலை ; ஒரே நாளில் 8000 உயர்ந்தது..!!
Dec 10, 2025, 09:42 IST1765339922183
ஃபோர்ப்ஸ் இந்தியா தரவுகளின்படி, 2000-ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை 4,400 ரூபாயாக இருந்தது. 2010 இல் இது 20,728 ரூபாயாக அதிகரித்தது. 2020 இல் 50,151 ரூபாயைத் தொட்டது.
ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிவிட்டது.
தங்கத்தின் இந்த விலை உயர்வு எவ்வளவு காலம் நீடிக்கும்? இப்போதைக்கு விலை குறைய வாய்ப்பு உள்ளதா?
இந்தியாவில் பண்டிகைக் காலங்கள் மற்றும் திருமண காலங்களில் தங்கத்திற்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே, தங்கத்தின் விலை உயர்வு இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
அரே நேரம் கோல்ட்மேன் சாக்ஸ், 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கத்தின் விலையில் மேலும் 6 சதவீதம் வரை உயர்வு காணப்படலாம் என்று கணித்துள்ளது.
தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
உலகம் முழுவதும் பல இடங்களில் நடந்து வரும் ராணுவ மோதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் நிலவும் சூழலில், மக்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதே இதற்கான மிகவும் அடிப்படைக் காரணம்.
இன்று (டிச.10) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,030க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.96,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.207க்கும், ஒரு கிலோ ரூ.2,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


