தங்க நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி: இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடு உயர்வு!
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து சவரன் விலை ரூ. 1.10 லட்சத்துக்கும் கீழே சென்றிருக்கிறது. இது நகை வாடிக்கையாளர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உலகளவில் தங்கம் விலை குறைவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்த ஓரிரு நாட்களில் தங்கம் விலை சரிய தொடங்கி இருக்கிறது.
இந்த சரிவு நிரந்தரமானதா? தங்கம் வாங்க இது உகந்த நேரமா? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் வாடிக்கையாளர்களிடையே எழுந்திருக்கின்றன. எனினும், இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருகிற நிலையில், தங்கம் விலை குறைவு சாமானியர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
நேற்று (செப்டம்பர் 29) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.25 குறைந்து ரூ.13,640-க்கும், ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.1,09,120-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.240-க்கு விற்பனையானது.
இன்று (செப்டம்பர் 30) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.13,710-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ரூ.1,09,680-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

