வாரத்தின் முதல் நாளே அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை..!!

 
Q Q

உலக நாடுகளின் பார்வை தங்கத்தின் மேல் குவிந்துள்ளதால் தங்கம் விலையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஜனவரி 3 ஆம் தேதி சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,00,160-க்கும், கிராமுக்கு ரூ. 60 குறைந்து உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ. 256 க்கும், கிலோவுக்கு ரூ. 4 ஆயிரம் குறைந்து 1 கிலோ ரூ. 2,56,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் காலையில் சவரனுக்கு ரூ.480 குறைந்த தங்கம் விலை மாலையில் ரூ.640 அதிகரித்தது. அதன்படி தங்கம் சவரனுக்கு ரூ.1,00,800 -க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,600க்கு விற்பனையாகிறது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,680க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,01,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும், கிலோவுக்கு மட்டுமே ரூ.8000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.