மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!!

 
gold

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து காணப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கங்களை கண்டு வருகிறது. சிலசமயங்களில் முதலீட்டாளர்களுக்கும், தங்க பிரியர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் தங்கம், சில சமயங்களில் அதிர்ச்சியையும்  கொடுக்கிறது.  பண்டிகை காலங்களில் தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொடும்  என்று எதிர்பார்த்த நிலையில் அதன் தேவை குறைவாக இருந்ததால் அதன் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

gold

அந்த வகையில் சென்னையில்  நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.37,048 ஆக விற்பனையானது. அதேபோல் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ. 24 குறைந்து  ரூ.4,631க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

gold

இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது.  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.14 அதிகரித்துள்ள நிலையில்  கிராம் ஒன்று ரூ.4650க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கம்  ரூ.37,200க்கும் விற்பனையாகி வருகிறது.