மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
Nov 10, 2023, 10:47 IST1699593469446

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 45 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5660-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 44 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5.615-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.