மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை - விலை நிலவரம் இதோ!!

 
tn

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,810க்கு விற்பனையானது.

gold

அதேபோல் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,480க்கும் விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.77. 20 காசுக்கும்,  ஒரு கிலோ ரூ.77,200க்கும் விற்பனையானது.

gold

இந்நிலையில் சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்தது. இதன் காரணமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,825க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.00க்கும் , ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.