தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது!!
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,615ஆக விற்பனையானது. தங்கத்தை போல் வெள்ளி விலையும் உயர்ந்தது.
இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5,645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 240 உயர்ந்து 45 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 70 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய் 70 காசுகளுக்கும் , ஒரு கிலோ வெள்ளியானது ரூபாய் 77 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.