ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை - அதிர்ச்சியில் சாமானியர்கள்!!

 
gold

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது.

gold

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,780க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.77.00க்கு விற்பனையானது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்நிலையில் சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,810க்கு விற்பனையாகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.77. 20 காசுக்கும்,  ஒரு கிலோ ரூ.77,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.