ஆட்டம் காட்டும் தங்கம்..! குறைந்தது போல் இறங்கி திடீரென உயர்ந்த தங்கம் விலை..!

 
gold

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. 

வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள் கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ரூ. 1,10,480-க்கும் ஒரு கிராமுக்கு ரூ. 140 குறைந்து ரூ. 13,810-க்கும் விற்பனை செய்யப்பட்டது.அதேபோன்று வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.255 -க்கும், கிலோ ரூ. 2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.


இந்நிலையில், தற்போது மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ரூ.1,11,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,440 உயர்ந்து ஒரு சரவன் ரூ.1,11,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ. 13,990-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260-க்கு விற்கப்படுகிறது. கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்து ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.