"திருடுவதை சாமி பார்க்க கூடாது"- அம்மனின் கண்ணை கட்டி கொள்ளை
Oct 27, 2026, 19:31 IST1793109718306
கடலூர் இறையூரில் திருடுவதை சாமி பார்க்க கூடாது என்பதற்காக அம்மனின் கண்களை துணியால் கட்டி விட்டு தாலி, உண்டியல் காணிக்கை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறையூர் பகுதியில் அம்மன் கோயிலில் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. திருடும்போது சாமி பார்க்கக் கூடாது என்பதற்காக, திருடர்கள் அம்மனின் கண்களைத் துணியால் கட்டிவிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அம்மனின் கழுத்தில் இருந்த தாலி மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கைப் பணமும் திருடப்பட்டுள்ளது. திருடர்கள் உண்டியலை உடைத்துவிட்டு, காணிக்கை நாணயங்களை அருகில் உள்ள வெள்ளாற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். கடந்த 24ஆம் தேதி கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் பிடிபட்ட நிலையில் உண்டியல், தாலி, பித்தளை பொருட்கள் மற்றும் ரூ.5,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

