தேவர் நினைவிடத்தில் கோவா முதலமைச்சர் மற்றும் அண்ணாமலை மரியாதை

 
annamalai

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் கோவா முதலமைச்சர் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மரியாதை செலுத்தினர். 

இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் குருபூஜையன்று, பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் ஐயா திருக்கோவிலில், மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் மற்றும் தமிழக பாஜக  மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று தெய்வத்திருமகனாரை வணங்கினோம்.


சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்துப் போராடி, ஒரு பெரும் சமூகத்தின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றியவர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள், பட்டியல் சமுதாய மக்களும் சென்று வழிபட உரிமை பெற்றுத் தந்தவர்களில் முக்கியமானவர். அரசியல் மற்றும் ஆன்மீகத்தில் மாபெரும் புரட்சி செய்த ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் புகழ் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.