கோவா பாஜக எம்.எல்.ஏ. காலமானார்..!!
Updated: Jul 19, 2026, 19:41 IST1784470281885
கோவா பாஜக எம்.எல்.ஏ.வும், முன்னாள் மாநில அமைச்சரவை அமைச்சருமான ஜெனிஃபர் மான்செரேட் காலமானார். அவருக்கு வயது 56. நீண்டகாலம் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
ஜெனிஃபர் மான்செரேட், 2012 முதல் தலேகாவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலை 2019-ல், அவர் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டு, வருவாய், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளுக்குப் பொறுப்பேற்றார்.
2019-ல் பாஜகவுக்கு மாறிய 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் அவரும் ஒருவர்.

