உடனே கடைக்கு போங்க..!! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது..!!

 
Gold

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்ட காரணத்தினால், மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் தொடங்கியுள்ளதால் தங்கம் விலையின் நிலை குறித்து கணிக்க முடியாத சூழல் உள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை சிறிய ஏற்றம், இறக்கம் என மாறி மாறி இருந்த நிலையில், இன்று கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சு விடும் வகையில் சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.

நேற்று ஒரு சவரன் ரூ.1,06,400க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.800 குறைந்து ரூ.1,05,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.240க்கும் மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000க்கு விற்கப்படுகிறது.

2025-ம் ஆண்டு இதே ஜூலை 13-ல் 1 சவரன் தங்கம் ரூ.73,120-க்கும், 1 கிராம் ரூ.9,140-க்கும் விற்பனையானது. 

.