'Go back Congress' ஸ்டாலின் இல்லம் முன் திரண்ட GEN Z திமுகவினர்
காங்கிரஸ் தலைவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து Go back Congress என்ற வாசகத்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தின் முன் பெண் தொண்டர் ஒருவர் நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
#WATCH | Chennai, Tamil Nadu: Outside visuals from the DMK chief MK Stalin's residence, where the INDIA bloc delegation led by Congress chief Mallikarjun Kharge and CPP chairperson Sonia Gandhi will arrive shortly to meet DMK chief MK Stalin. pic.twitter.com/cveuGEK6Hu
— ANI (@ANI) November 29, 2026
திமுகவிடம் லோக்சபா-22 எம்பி , ராஜ்யசபா- 08. இதில் ராஜ்யசபா எண்ணிக்கை தான் வரவிருக்கும் Delimitation (Second) Bill வெற்றியடைய தேவையான ஒன்று. இந்த நிலையில் தவெகவின் தயவை விட காங்கிரசுக்கு திமுகவின் தேவை அதிகம். இந்த நிலையில் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்களும் இன்று திமுக தலைவரை சந்திக்க சென்னைக்கு படையெடுத்துள்ளனர். தேர்தல் காலங்களில் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்வதும், டெல்லியில் இருந்து தலைவர்கள் தமிழகம் வருவதும் இயல்பானது. ஆனால், ஒரு தேசிய விவகாரத்திற்காக ஒட்டுமொத்த தலைவர்களும் தமிழகம் வருவது வரலாற்றில் இதுவே முதன்முறை.
ஸ்டாலினின் இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடனான சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், வெளியில் காங்கிரஸ் தலைவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து Go back Congress என்ற வாசகத்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தின் முன் பெண் தொண்டர் ஒருவர் நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பதாகை ஏந்தி நின்ற அந்த பெண்ணை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

