“ஆதாரமின்றி தன் மீது குற்றச்சாட்டு”- வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஞானசேகரன் மனு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞானசேகரன் என்பவரை கடந்தாண்டு டிசம்பர் மாதம் காவல்துறை கைது செய்து சிறையிலடைத்தது. இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றப் பத்திரிகை சென்னை உள்ள மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தமக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளது எனவே வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு சென்னை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு ஞானசேகரன் முன்பு இன்று ஆஜார் படுத்தபட்டார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என தெரிகிறது.