செங்கோட்டை மலைப்பாதையில் கண்ணாடி ரயில் என்ட்ரி!

 
செங்கோட்டை மலைப்பாதையில் கண்ணாடி ரயில் என்ட்ரி!

தென்காசி, செங்கோட்டை ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பாக தமிழக - கேரளா எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசிக்க விஸ்டாடோம் எனப்படும் கண்ணாடி ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்படுகிறது.


தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக மதுரை - குருவாயூர் விரைவு ரயிலில் (16327 / 16328) இரண்டு விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. மதுரையிலிருந்து - அக்.22, 2026 முதல் ஜன.15, 2027 வரை,குருவாயூரிலிருந்து - அக்.23, 2026 முதல் ஜன.16, 2027 வரை இயக்கப்படும். கேரளாவில் ஓடும் ஒரு ரயிலில் முதல் முறையாக இந்த வசதி அறிமுகமாகிறது. இதற்கான சோதனை ஓட்டம் முடிந்துவிட்டது.


சிறப்பம்சம் என்ன?

முழுக்க கண்ணாடி: மேற்கூரை முழுவதும் கண்ணாடி பேனல், பக்கவாட்டில் அகலமான கண்ணாடி ஜன்னல்கள்.

சுழலும் சீட்: இயற்கை அழகை பார்க்க ஏதுவாக 180 டிகிரி சுழலும் ரொட்டேட்டிங் சீட்கள்.

360 டிகிரி வியூ: மலைகள், சுரங்கங்கள், அருவிகள், ஆறுகள், காடுகள் என கொல்லம் - செங்கோட்டை பாதையின் அத்தனை அழகையும் நேரடியாக காணலாம்.

வசதிகள்:  ஒரு பெட்டியில் 44 சீட்கள் மட்டும், ஏசி, வைபை, ஜி.பி.எஸ் அடிப்படையிலான தகவல் திரை, ஆட்டோமேட்டிக் கதவுகள்.

தயாரிப்பு: சென்னை பெரம்பூர் ICF-ல் தயாரிக்கப்பட்டது.