அமித்ஷாவுடன் பேசியது என்ன?- ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி

 
ச்

சென்னை ஐ.டி.சி. ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பு குறித்தும் அமித்ஷாவுடன் ஆலோன்சை மேற்கொண்டேன். 2026 தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியை ஒருங்கிணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர் பொன்முடியின் பேச்சு அநாகரிகமானது, அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.