“அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்”- ஜி.கே.மணி

 
“அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்”- ஜி.கே.மணி “அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்”- ஜி.கே.மணி

நாளை ( டிச.29) நடைபெறும் பாமக செயற்குழு கூட்டத்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம்; 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை மருத்துவர் ராமதாஸ் வெளியிடுவார் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “ புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. சிரப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாமக கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என தமிழ்நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை யாரோடும் பேசவில்லை. பாமகவிற்கு நெருக்கடியான சூழல் என்ற நிலை மாறி அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். நீக்குவதற்கான காரணம் வலிமையான பாமக கட்சியை சூழ்ச்சியால் திட்டமிட்டு அபகரிக்கும் நோக்கில் பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வந்த நடவடிக்கை ராமதாஸ்க்கு பெரும் மனம் வேதனை ஏற்படுத்தியது. 

அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள். ராமதாஸ் தலைமையில் பாமக அமைக்கும் கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். பாமகவுக்கு அன்புமணி வர வேண்டுமென அனைவரும் விரும்பினோம். ஆனால் அவர் சூழ்ச்சியால் பிரிந்து சென்றார்” என்றார்.