விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்
Apr 2, 2025, 14:50 IST1743585656567

தமிழக அரசு, ஜவுளி தொழிலை பாதுகாக்கும் விதமாக விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு, ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற முன்வர வேண்டும்.தமிழக அரசு, ஜவுளித் தொழிலின் மிக முக்கியப் பிரிவான விசைத்தறி தொழிலை மிக முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிகைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 150க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களின் வாழ்வாதாரமான விசைத்தறியைப் பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சிக்கு த.மா.கா(மூ) வின் ஆதரவு என்றைக்கும் உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.