மருத்துவர் பத்ரிநாத் மறைவு - ஜி.கே.வாசன் நேரில் சென்று அஞ்சலி

உடல்நலக்குறைவால் உயிரிழந்த டாக்டர் பத்ரிநாத் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூரினார்.
செங்கமேடு சீனிவாச பத்ரிநாத், சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இவர் தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார். பத்ரிநாத், பரோபகாரிகள் குழுவுடன் சேர்ந்து, 1978ஆம் ஆண்டில் சென்னையில் சங்கர நேத்ராலயா எனும் மருத்துவ மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளைகளை நிறுவினார். இது ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இலாப நோக்கற்ற கண் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒரு பிரிவாகும். சராசரியாக, 1200 நோயாளிகள் மருத்துவமனை நாள்தோறும் இம்மருத்துவமனைக்கு வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் 100 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.[9] சங்கர நேத்ராலயா 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, கண் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு பெற்றவர்களுக்கு விழியக-விழித்திரை அறுவை சிகிச்சை, கருவிழிப்படலம், ஓக்குலோபிளாஸ்டி, கண்விழி விறைப்பு, குழற்படலம் மற்றும் பொதுவான கண் மருத்துவம் ஆகியவற்றில் நிதியுதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் கண் மருத்துவத்தில் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்குகிறது. இந்த நிலையில், பத்ரிநாத் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பத்ரிநாத் 1996-ல் இந்தியக் குடியரசில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருதினைப் பெற்றார். பத்மஸ்ரீ மற்றும் மரு. பி. சி. ராய் விருது உட்படப் பல விருதுகளையும் பெற்றார்.
சென்னை, #சங்க_நேத்ராலயாவின் நிறுவுனரும் தலைவருமான. டாக்டர்.S.S. #பத்திரிநாத் அவர்கள் காலமாதையொட்டி, அவர்களது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய போது#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #TNPolitics pic.twitter.com/PhxdYxW0hy
— G.K.Vasan (@GK__Vasan) November 21, 2023
இந்த நிலையில், பத்ரிநாத் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூரினார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னை, #சங்க_நேத்ராலயாவின் நிறுவுனரும் தலைவருமான. டாக்டர்.S.S. #பத்திரிநாத் அவர்கள் காலமாதையொட்டி, அவர்களது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.