“ஊழலற்ற நிர்வாகம்”- இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஜி.கே.வாசன் திடீர் ஆதரவு
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெகவின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு தமாகா ஆதரவளிப்பதாக ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு, வரும் அக். 6ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், தவெக, திமுக, அதிமுக, கம்யூ., நாம் தமிழர் கட்சிகள் களமிறங்கி உள்ளன.கடந்த சட்டசபை தேர்தலின் போது கூட்டணியில் இருந்ததால், தங்களுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறிவந்தார். பாமகவின் ஆதரவை பெற தவெகவும் முயற்சித்து வந்தது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவது இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்தார்.
இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெகவின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு தமாகா ஆதரவளிப்பதாக ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். “முதல்வர் விஜய் மக்களுக்கு நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்கத் தொடங்கி இருக்கிறார். எனவே, அவருக்கு ஆதரவு அளிக்கிறோம்” என்றும் ஜி்.கே. வாசன் குறிப்பிட்டுள்ளார்.

