ஈபிஎஸ் மீது வழக்கு போடுவது நியாயமல்ல- ஜி.கே.வாசன்

 
gk vasan

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கதக்கது என எம்பி ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

GK Vasan meets Chief Minister Edappadi Palanisamy - Gk vasan- edappadi  palanisamy- cm - tamilnadu- aiadmk - wishes | Thandoratimes.com |

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும்பொழுது, அவரை தரக்குறைவாக பேசிய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் (வயது 42) மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த புகாரின் பேரில் அவர்  மீது  இரு பிரிவுகளின் 341, 294 கீழ் அபாசமாக தரக்குறைவாக பேசுதல், தாக்க முயற்சி என இருபிரிவுகளில் அவனியாபுரம் போலீஸார்  வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன், மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரீ கிருஷ்மூர்த்தியின் மகன் (அரவிந்தன்) ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி, தாக்குதல் செல்போன் பறிப்பு , காயம் ஏற்படும் வகையில் கொடூரமாக தாக்குதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் எம்பி ஜிகே வாசன், “அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் மீது வழக்கு போட்டிருப்பது கண்டிக்கதக்கது. அநாகரிக சம்பவத்திற்கு காரணமானவரை கைது செய்யாமல் ஈபிஎஸ் மீது வழக்கு போடுவது நியாயமல்ல. இது அதிமுக வளர்ச்சியை குலைப்பதற்கான அரசின் முயற்சியாகவே தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.