9 ஆண்டு கால மோடி ஆட்சியில் நாடு அபரிவிதமான வளர்ச்சி- ஜி.கே.வாசன்

 
gk vasan gk vasan

நாட்டின் நலனுக்காக தேசிய அளவில் முழங்கிய தமிழக தலைவர்களான ராஜாஜி, காமராஜ் ஆகியோரை நினைவுகூர வேண்டியது அவசியம். 9 ஆண்டு கால மோடி ஆட்சியிலும் நாடு அபரிவிதமான வளர்ச்சியை கண்டுள்ளத என தமாகா தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

GK Vasan

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய தமாகா தலைவர் ஜி.கே வாசன், "இந்த நேரத்தில் காந்தியுடன் துணை நின்று நம் நாட்டிற்காக சுதந்திரம் பெற்றுக் கொடுத்த அனைவரையும் நினைவுகூர வேண்டும். 75 ஆண்டுகளில் கல்வித்துறை, விவசாயத்துறை உட்பட அனைத்துத் துறைகளில் நாம் வளர்ச்சி கண்டுள்ளோம். அதைத் தாண்டி, இன்று நம் நாட்டின் உதவிகளை பிற நாடுகள் பெறும் நிலை உருவாகியுள்ளது.

அந்த அளவுக்கு இந்த நாடு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் இருந்து ராஜாஜி, காமராஜ் ஆகியோர், நாட்டின் மீதான அக்கறையோடு பேசியுள்ளார். அவர்களையும் நாம் இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் ஆட்சியிலும் இந்தியா அபரிவிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது" என்று தெரிவித்தார்.