மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!!

 
tn

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது.

eb

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் சார்பில் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏழை , எளிய , நடுத்தர மக்களின் எண்ணங்கை , கோரிக்கைகளை புறக்கணித்து மின் கட்டண உயர்வை அறிவித்து இருப்பது மிகவும் கண்டிக்கதக்கது . தமிழகத்தில் சென்னை , கோயம்புத்தூர் , மதுரை ஆகிய பகுதி மக்களிடம் மட்டுமே தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயர்வு குறித்து கருத்துகேட்பு கூட்டத்தை நடத்தியது . அக்கூட்டத்தல் 90 % சதவிகித மக்கள் மின் கட்டண உயர்வு குறித்து கடுமையாக எதிர்த்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் . இருந்த பொழுதிலும் சம்பிராதத்திற்காக கருத்து கேட்பு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு , நுகர்வோர்களின்  கருத்துக்களை  உதாசினப்படுத்தி , தற்பொழுது கட்டண உயர்வு அறிவிப்பை அறிவித்து இருக்கிறது.

gk

அரசு தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என்று நம்பிக்கொண்டு இருந்த மக்களுக்கு இச்செயல் வெந்தபுண்ணில் வேல் பாச்சுவது போல் உள்ளது .  வாக்குறிதிகளை அளித்து வெற்றிப்பெற்று , அவற்றை நிறைவேற்றாமல் ஏழை , எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசையும் , தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தையும் கண்டித்து , ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக , மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி எனது தலைமையில் வருகிற செப்டம்பர் 19 - ஆம் தேதி , திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் , மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது . தமிழ் மாநில காங்கிரஸ் , மாநில நிர்வாகிகள் , மாவட்ட தலைவர்கள் , நிர்வாகிகள் , இயக்க நண்பர்கள் , பொது நல இயக்கங்கள் மற்றும் தொழில் நிறுவனத்தை சார்ந்தவர்களும் , பொது மக்களும் பெருந்திரலாக கலந்துகொண்டு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.