பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

 
GKvasan

கடந்த 2021 பொது தேர்தலில் போட்டியிட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முடிவு செய்யப்படும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

GK Vasan-led TMC gets ready for Tamil Nadu elections

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “அண்ணா பல்கலைக் கழக மாணவி சம்பத்திற்கு உரிய விடை கிடைக்காமல் இருப்பதால்  அனைத்து மாணவி  பெற்றோர்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். குற்றவாளிக்கு அரசியல் பின்புலம் உள்ளது. சார்- க்கு விடை கிடைக்க வேண்டும். அப்போது தான் அரசை நம்புவார்கள்.. இது போன்ற தொடர் பாலியல்  குற்றவாளிக்கு தூக்கு தண்டனை தர வேண்டும்  என்பது தமாகாவின் எண்ணம். போதை பொருட்களால் பாலியல் தொந்தரவுகள் நடைபெறுகிறது.

திமுக கூட்டணி கட்சிகள் கூட எமர்ஜென்சி போல இருக்கிறது என கூறுவது அரசின் நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் அகில இந்திய விவகாரமாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. மாணவி , பெற்றோர்களுக்கு எதிர்க்கட்சிகள் துணை நிற்க வேண்டும். அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை என்பது  சட்டம் அனைவருக்கும் சமம். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஏதோ ஒன்றை மறைக்க நினைப்பதாக மக்கள் நினைக்கின்றனர், அதனால் தான் சிபிஜ விசாரணை வேண்டும். 6 மாதத்திற்கு பிறகே கூட்டணி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற தேர்தல் வரும் போது ஆளும் அரசை நீக்குகின்ற வகையில் கூட்டணி அமையும்” என்றார்.