”இதுதான் சனாதனம்..” தெரிந்தும் சிலர் நடிக்கின்றனர்- ஜி.கே.வாசன்

தமிழகத்தில் மதுக்கடையை படிப்படியாக மூட வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”மதுக் கொள்கையில் தமிழக அரசுக்கு ஆக்கப்பூர்வமான செயல்பாடு தேவைப்படுகிறது. தமிழக மக்கள் மீது நலன் அக்கறை கொண்ட அரசாக திமுக அரசு இருந்தால், உடனடியாக மதுக்கடைகளை மூடலாம். சட்டமன்ற தேர்தலுக்குள் முழுமையாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.
மகளிருக்கு எதிரான பாலியல் குற்றங்களில் முதல் தகவல் அறிக்கையில் உண்மை கண்டறியப்பட்டால் காவல்துறையும், நீதிமன்றமும் குறுகிய காலத்தில் விசாரணையை முடித்து உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். அதுவும் தூக்கு தண்டனையாக நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா வலியுறுத்துவதாக தெரிவித்தார். வெளியுறவுதுறை அமைச்சர் ஜெயசங்கரின் இலங்கை பயணம், தமிழக மீனவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அமையும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்கும் நிலையை உருவாக்கும் என்றார். மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு சாட்சியாக மத்திய அரசு மெட்ரோ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார். போயர் சமூகம் கல் உடைக்கும், கட்டிடம் காட்டும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வாழ்க்கையை முன்னேற்றும் வகையில், சீர்மரபினர் பிரிவில் சேர்த்து, இட ஒதுக்கீடு 11 சதவீதம் ஒதுக்க வேண்டும். கனிம குவாரிகள், கல் குவாரி டெண்டர் விடும் போது 50 சதவீதம் போயர் சமுதாயத்திற்கு ஒதுக்க வேண்டும். மத்திய அரசின் மாணவர் நலன் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் அனைத்து மாநிலங்களும் ஒத்துப்போகிறது. ஆனால் இங்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக செயல்படுத்த மறுக்கிறது. குறிப்பாக கல்வியில் அரசியல் கூடாது என்ற நிலையில் செயல்பட்டு தமிழக அரசு மத்திய அரசின் கல்வி கொள்கையை ஏற்க வேண்டும்.
மத்திய அரசு நிதிகளைப் பெற்று கல்வித்துறையை உயர் பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும். நீட் தேர்வில் தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தர மாணவர்கள், மாற்ற மாநில மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் செயல்பட துவங்கியுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்வி கூறியாக உள்ளது. கொலை, கொல்லை, போதை பொருள் பயன்பாட்டை தடுக்க முடியாமல் இருப்பதால் குற்றம் நடைபெறுகிறது. இதை தடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. வடகிழக்கு பருவ மலை வழக்கத்தை விட அதிகம் என தெரிகிறது. தமிழக அரசு முனெச்சரிக்கை நடவடிக்கைகளை வேகமாக எடுக்க வேண்டும். சனாதனம் என்பது ஒரு வாழ்க்கை முறையாகும். அதை எல்லோருக்கும் பொருந்தும், ஆனால், புரிந்தவர்கள் புரியாமல், தெரிந்தவர்கள் தெரியாமல், அறிந்தவர்கள் அறியாமல் நடித்து கொண்டு இருக்கின்றனர்” என்றார்.