மலையாளம் மொழிப் பேசும் கேரளா மக்களுக்கு ஓணம் பண்டிகை நல் வாழ்த்துக்கள் - ஜி.கே.வாசன்

 
GK Vasan

மலையாளம் மொழிப் பேசும் கேரளா மக்களுக்கு ஓணம் பண்டிகை நல் வாழ்த்துக்கள் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Onam

இதுக்குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கேரளா மாநில மக்களின் பாரம்பரியமிக்க விழா, ஓணம் பண்டிகை. இப்பண்டிகை இனம், மதம், மொழிக்கு அப்பார்பட்டு அனைவராலும் ஒற்றுமையோடு கொண்டாடப்படும் பண்டிகை.ஓணம் பண்டிகையின் போது, பாதாள லோகத்தில் இருந்து, பூலோகத்திற்கு வருகைதரும், மகாபலி மன்னனை மகிழ்ச்சியுடன் கேரளா மக்கள் வரவேற்பதாக ஐதீகம். அப்பொழுது மகாபலி மன்னனை வரவேற்கும் முகமாக, "அத்தப்பூ கோலம்" இட்டு, புத்தாடை அணிந்து, விதவிதமான அறுசுவை உணவு படைத்து வரவேற்று கொண்டாடுகிறார்கள்.

gk

பத்து நாட்களுக்கு கொண்டாடப்படும் இப்படிகையின் போது, களரி போட்டி, படகுப் போட்டி, பாரம்பரிய நடனப் போட்டி நடனப் போட்டி என்று பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, மிக மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை அம்மாநிலத்தில் அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு மிக்க நாளில், தமிழ்நாட்டில் வாழும் மலையாளம் மொழிப் பேசும் மக்களுக்கும் மற்றும் கேரளா மாநிலத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று வாழ வேண்டும் என்று மனம் நிறைந்த நல் வாழ்த்துகளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.