உத்தமர்களின் பிறந்தநாளில் அவர்களின் தியாகங்களை நினைவு கூறுவோம் - ஜி .கே.வாசன்

 
GK Vasan

தேசத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைத்த உத்தமர்களின் பிறந்தநாளில் அவர்களின் தியாகங்களை நினைவு கூறுவோம் என்று ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின்பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்தியாவின் வருங்கால தூண்களாக விளங்கும் மாணவர்களின் எதிர்காலத்தை, கட்டமைக்கும் அறியப் பணியில் தங்களை அர்பணித்துக் கொண்டு அயராது உழைக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக "ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

tn

கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆளுமைத் திறனை வளர்க்கும் முயற்சி எனலாம். இந்த கல்வியை போதிக்கும் ஆசிரியர்களை, மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தெய்வத்திற்கு மேலாக கருதுகிறோம். தன் மாணவர்களின் மீது அக்கறையோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு, அவர்களின் முன்னேற்திற்கு அடித்தளம் இடும் கல்வியை மட்டும் போதிக்காமல், அன்பு, கருணை, பொது நலன், தேசப் பற்று, ஒற்றுமை என்று பல்வேறு குணநலன்களை போதிக்கும் ஆசானாக விளங்கும் ஆசிரியர்களை இந்நாளில் போற்றி வணங்குவோம்.

tn

மேலும் இன்று "செக்கிழுத்த செம்மல்" வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினம். தேசத்தின் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து உயிர் நீத்த உத்தமரின் பிறந்தநாள். ஆங்கிலேயர்களின் அடிமைவிலங்கை உடைத்து "சுதேசி இயக்கத்தை" தொடங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பலோட்டிய வீரத்தமிழர் பிறந்தநாள் இன்று. அவர்கள் அன்று சிந்திய ரத்தத்தால் இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றோம். தேசத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைத்த உத்தமர்களின் பிறந்தநாளில் அவர்களின் தியாகங்களை நினைவு கூறுவோம். போற்றுவோம். வருங்காலங்களில் வளமான தமிழகம், வலிமைான பாரதம் அமைய பாடுபடுவோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.