அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் கொடுத்த தமிழ் மாநில காங்கிரஸ்

 
ச் ச்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்  என்ற இளைஞர்.  கடந்த ஜூன் 27 அன்று இந்தக் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73) , அவரது மகள் நிக்கிதாவின் காரில் வைக்கப்பட்டிந்த 10 சவரன் நகைகள் காணாமல் போனது.  இதுதொடர்பான புகாரின்பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார். 

 ‘என் உயிருக்கு ஆபத்து இருக்கு., பாதுகாப்பு வேணும்’ திருப்புவனம் இளைஞர் வழக்கின் முக்கிய சாட்சி  டிஜிபி-க்கு கடிதம்.. 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்காக மாற்றப்பட்டு திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை  எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  தொடர்ந்து மானாமதுரை டி.எஸ்.பி.யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு தமாகா தலைவர் ஜிகே வாசன் சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியுதவியை முன்னாள் எம்பி உடையப்பன், முன்னாள் எம் எல் ஏ ராஜேந்திரன், மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி உள்ளிட்டோர வழங்கினர். மேலும் அஜித் குமார் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.