"வெற்றி துரைசாமி உயிரிழப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது" - ஜி.கே.வாசன் இரங்கல்

 
gk vasan

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் மறைவுக்கு  ஜி.கே.வாசன்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,

தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்களின் அன்பு மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

GK Vasan

இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் நதியில் இருந்து அவரது உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது.

இளம் வயதிலேயே அவரது உயிரிழப்பு அவரது தந்தைக்கும், குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது தந்தை சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.