மூப்பனாரின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் - ஈபிஎஸ் ட்வீட்

 
eps

மூப்பனாரின் 22ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஈபிஎஸ் அவரை போற்றி புகழ்ந்துள்ளார்.

tn

ஜி. கே. மூப்பனார் தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், நான்கு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றிய இவர் கருத்து வேறுபாட்டால் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 30-8-2001 ல் காலமானார்.


இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தஞ்சையில் சாதாரண கிராமத்தில் பிறந்து  தனது கொள்கை பிடிப்பால் தேசிய அரசியலில் தடம் பதித்து தமிழர்களின் பெருமையை  தழைத்தோங்க செய்து , தன் வாழ்நாள் முழுவதும் வேளாண் பெருங்குடி மக்களின் குரலாக ஒலித்து, அனைவரிடத்திலும் நட்புறவு பேணி,எளிய பண்பாளராகத் திகழ்ந்த பெருந்தகை திரு.ஜிகே.மூப்பனார் அவர்களின் நினைவு நாளில் அவர் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.